சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.02.23
ஆக்கம்-95
மொழி
கற்காது விலங்காயிருந்தது கற்று
விளப்பம் தெரிந்து மொழி பேசத்
தெரிந்ததுமே ஆறறிவு படைத்த
மனிதன் ஆகினான் அன்றோ

மனிதன் ஒவ்வொருவனுக்கும்
மொழி முக்கியமானதொன்று
நடிப்பு, நாடகம், இசை,அழுகை,
சிரிப்பு,சைகை இவை அனைத்தும்
உணர்வு,எண்ணம் வெளிப்படுத்தும்
ஒரு கருவியானது அன்றோ

தமிழனுக்குத் தாய் மொழி தமிழன்றோ
தமிழ் மொழிக்குத் தரணியில் தலை
வணங்காதவருமுண்டோ
எத்தனை மொழி வந்திடினும் அத்தனை
மொழியிலும் எம் மொழி தான் பல
சொற்கள் தேடி பல பல அர்த்தம் கூடி
சரித்திர சாதனை படைக்கிறதன்றோ

ஒரு இனமழிய வேண்டுமாயின்
மொழி அழிய வேண்டுமே
இதனால்தான் தமிழ் மொழி பேசும்
ஒட்டுமொத்தத் தமிழனை இல்லாதொழிக்க
பொல்லாத சிங்கள அரசு பயங்காரவாதப்
பட்டியலில் முத்திரை குத்தி தலை
வெட்டி துரத்தித் துரத்தி விழுத்துகிறதன்றோ.