சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.02.23
ஆக்கம்-94
சாதனை
தோல்வி தானே வெற்றிக்கு முதற்படி
சுறுசுறுப்பான சவால் அடுத்தபடி
விறுவிறுப்பான வாய்ப்பினைத் தேடி
எறும்பு போல ஓயாது கடுமையாய்
உழைத்திடின் சாதனை படைத்திடுமே

இலட்சியம்,உறுதி,நம்பிக்கையுடன்
முயற்சியில் முழு மூச்சுடன் பயிற்சியில்
பாடுபடுவோர்க்குப் பல சோதனை
வந்திடினும் போராடி வென்று வெகு
சீக்கிரம் சாதனை கிடைத்திடுமே

பஞ்சியுடன் வாழும் சோம்பேறிகளிற்கு
கெஞ்சிக் கெஞ்சி மித மிஞ்சிப் போதனை
செய்திடினும் வேதனை தான் எஞ்சிடுமே

பள்ளியில் படிப்பை விட்டுச் சித்திரம் கீறுபவனும்
துள்ளிப் பாய்பவன் விளையாட்டு வீரனாவதும்
எந்தத் திசையில் நீந்திக் கரையேற முடியுமோ
அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து
முன்னேறிடின் சாதனையாளராய்
வெற்றிக் கொடியுடன் சரித்திரத்தில்
இடம் பிடித்திடுமே.