சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.05.24
கவி ஆக்கம் -146
குருதிப் புனல்

அத்து மீறிய யுத்த ஆண்டு ஆக்கிரமிப்பு
பொத்தெனச் சீறிய குண்டு வெடிப்பு
பத்தெனப் பீறி கருகி மாண்ட துடிப்பு

முத்தான மழலை கத்திய மூச்சிழப்பு
வித்தான போராளியில் பேரிழப்பு
மொத்தமாய் மாந்தர் புதைந்த வேரிழப்பு

உழுத்துப் போன உடல் உரமான சடலமும்
வழுவழுத்து மரத்துப் போன உதிரமும்
துரத்தித் துரத்திப் பழிவாங்குமே

வீறிட்டுக் குளறும் அழுகுரலும் காற்றில்
சீறிட்டுப் பார்த்துப் பார்த்து முழி பிதுங்க
குழி பதுங்க குருதிப் புனல் கூக்குரலோடு
அக்கிரமக்காரரைத் துரத்துதே .