07.05.24
ஆக்கம்-145
விழிப்பு
தமிழினம் எனச் சுட்டிக்காட்டி
தரங்கெட்ட வழி குட்டிக்குட்டி
ஒட்டு மொத்தத் தமிழனை
முழுதாய் விழுங்கும் தாழிப்பு
துடிக்கத் துடிக்க தேடி அழிப்பு
இனமே மனத்துவேஷ ஒழிப்பு
குடித்தன மாந்தர் குடித்துக்
கூத்தாட கலாச்சாரத் தாழிப்பு
வெட்டி வீழ்த்தினும் பட்டுப் போகாது
வெட்ட வெட்டத் தழைக்கும் விழிப்பு
பட்டி தொட்டி எங்கும் கட்டி எழுப்பி
வட்டியோடு குட்டியும் தட்டிக் கேட்க
வீதியில் போராடும் விழிப்புணர்வு .