30.04.24
ஆக்கம் -144
அழகு
முதுமைக்குப் பதுமை இளமையும்
இளமைக்குப் புதுமை எளிமையும்
எளிமைக்கு ஏழ்மை வறுமையும்
வறுமைக்குப் பழமை பொறுமையும்
பூத்துக் குலுங்கும் அழகுக்கு அழகு
பொறுமைக்கு உவமை பூமித் தாயும்
உவமைக்கு உரிமை விண் தந்தையும்
உரிமைக்குப் பெருமை சூரியசந்திரனும்
பெருமைக்கு அருமை வெயில் மழையும்
சேர்த்து முழங்கும் கொடை அழகு
ஆளுமைக்கு அருமை அரசாட்சியும்
அருமைக்கு உரிமை மனசாட்சியும்
உரிமைக்கு மகிமை கருவறையும்
மகிமைக்கு உடைமை இறையருளும்
போற்றிப் புகழும் அழகு தனி அழகே .