11.04.24
ஆக்கம் -311
பூக்களின் பூ வசந்தம்
பாக்களின் இதமான சந்தம் போல
பூக்களின் பூ வசந்தம் பதமாகவே
விதம் விதமாகவே மிதம் சிந்துமே
தேக்கி வைத்த இதளின் வாசம்
ஆக்கிய நறுமணம் தேசமெங்கும்
மணம் வீசும் பூவின் சுகந்தமே
பல் இனங்களில் பதமிட்டு புல்,
பூண்டு முதல் கல்லிடையே
விரிந்த அழகு மொட்டுக்கள்
சூரியக் கதிர் பட்டுத் தெறித்த
சந்தோஷத்தில் அற்புதமாய்ப்
புத்துயிர் பெற்று பூத்துச்
சிரித்ததே
பல நிறங்களில் சிறகடித்து
விழிகளிற்கு நல் விருந்தாய்
பரவசமூட்டப் பறந்திட்ட
வண்ணப்பூச்சிகள் பூ நிறமாய்
ஒளித்திருந்து மின்னி மின்னி
மனம் குளிர நிறைத்ததே .