சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.04.24
ஆக்கம்-141
பணம்

பணமில்லை எனில் பாசம் பொங்கிடும்
பண்போடு இனிமை வாசம் தேங்கிடும்
அன்போடு உறவு கூடித் தனிமை
இன்றித் தங்கிடும்

பணமுண்டானால் நிம்மதி மங்கிடும்
தனமோடு பேராசை தொங்கிடும்
ஆணவ அதிகாரம் நியாயமின்றிய
வாழ்வு நோயோடு தூங்கிடும்

போதுமெனில் பேரின்பம் பங்கிடும்
போதாதெனில் பூகம்பம் மொங்கிடும்

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே
உளமாற இருப்பதை ஊதிப் பொருமாது
அளவான பணமோடு வாழப் பழகிப்
பங்கிடுவோமே .