சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.02.23
ஆக்கம்-93
ஊக்கி
ஊக்கி என்பது ஊக்கப்படுத்துவதே
சீக்கிரம் முன்னேற பிழையான
பழக்கவழக்கமோடு தாக்கப்படுதே
தற்கால சக்தியுடன் போராட போதைப்
பொருளிற்கு அடிமையாகுதே
முக்கித் தக்கி முயற்சி எடுக்காது
பயிற்சி கொடுக்காது சாதனை படைக்க
மாத்திரை நாடுதே

சாக்குப் போக்குச் சொல்லி ஊசி மருந்தில்
முதற்படி ஏற மனம் துடிக்குதே
அரசியல்வாதி ஆக்கிடும் புது சட்டமதில்
பள்ளி மாணவர் திசை திருமபி
ஊக்கமிலாது மரணத்திற்குட்படுதே
மருந்து நிவாரணியாலே மாந்தர்
உருக்குலைந்து உறுப்பெரிந்து போகுதே

ஊக்கியானது உதாரணமயின் நன்றே
இல்லையேல் உதறுவது நன்றே.