சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.02.23
ஆக்கம்-92
நிச்சயதார்த்தம்
இரு மனம் ஒன்று சேர்ந்து
திருமணம் எனும் இல்லறம்
நல்லறமோடு கரும்பாய்
இனித்துக் காலமெலாம்
கண் கலங்காது வாழையடி
வாழையாகத் தழைத்தோங்க
முதன்முதலில் கூடும் விழாக்கோலம்

மணமகன் மணமகள் இரு வீட்டு
சம்பந்தியரும் அளவளாவி இருவர்
எண்ணமதினைத் தெரிந்து கலந்து
உரையாடிடும் நிழலான சம்பந்தம்
நிஜமாயிடும் நிச்சயதார்த்தம்

தமிழர் கலாச்சாரமதில் என்றுந் தொடரும்
விழாவானது தாம்பூலங்கள் பரிமாறப்படடு
புரிந்துணர்வோடு பெற்றோர், உறவினரோடு
முடிவானதெனத் தீர்மானம் ஆயிடினும்
சீதனம் ,நகை,ரொக்கம் எனப் பேசிக்
குழப்பி அடித்து பெண்ணின் பெற்றோரைக்
கண்ணீரில் மூழ்கடிப்பதும் சில
நிச்சயதார்த்தமே.