சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.11.23
ஆக்கம் -125
எச்சம்

பண்டைய காலமோ வீட்டு
விலங்கு எச்சம் பசளையானது
இன்றைய கோலமோ கோட்டு
சூட்டு சீன மோட்ச இரையானது

மரமோ பட்டுப் போனது
உரமோ சுட்டு வினையானது
வயலும் வீடும் பேசியது
எச்சமே நீயோ சொச்சம்

அச்சமின்றிக் கச்சிதமாய்
முழுமூச்சோடு தொட்ட
உச்சமே உழைப்பானது

கச்சை கட்டிக் காணாமல்
போனவரோ பிச்சைப்
பாத்திரம் ஏந்தியும்
திருந்துவாரோ ?