சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.11.23
ஆக்கம் -124
பிறந்த மனை

வரலாற்று மனிதன்
வாழ்க்கைக் காலமதில்
பிறந்த மனை களிப்பு
பேராற்றுப் பெற்றோரின்
ஆற்றாத கண்ணீர் பூரிப்பு

தந்தையின் தனி உழைப்பு
இருபத்தைந்து காணிப் பரப்பு
வளைந்து சுற்றிய அரணில்
நுழைந்து பற்றிய நொடியின்
துடிப்பு

அன்ன இலட்சுமி இல்லமது
அன்பின் இருப்பிடமாய்
அரவணைத்த பசி தீர்ப்பிடம்
ஆடிப்பாடிய கலகலப்பது

மாமரக் கிளை ஊஞ்சல் கட்டி
இலை பிடுங்க உண்ணியே
காலைத் தொடும் மண்ணிலே
சேலைத் தலைப்பில் துடைத்திடும்
தாயன்பே பிறந்த மனை .