வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.02.23
ஆக்கம்-258
சுதந்திரமாமே
சுதந்திரமாமே எங்கே என்று
வாய் பிளக்கிறதே
1948 ல் எம் நாடும் ஆங்கிலேயரால்
சுதந்திரமானதே
அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்,
சிங்கள,முஸ்லீம் இனப்பிரச்சனை
முரண்பாடாய் மூண்டு கொண்டதே

எந்த ஆட்சி வந்தாலும் எப்படிப்
போரடினாலும் ஏமாற்றமே
இம்மியளவும் இனப்பிரசசனை
தீராத ஒன்றே
ஆனால் மந்திரிமாரின் தந்திரமோ
மாந்திரிகளின் மந்திர வித்தையானதே

பள்ளி படிப்பில்லை,படித்தால்
வேலையில்லை,உண்ண உணவோ
இருக்க வீடோ ,நோய்க்கு மருந்தோ
எதுவுமில்லாது என்னதான் செய்வான்
மனிதன்

துடிக்கும் அவனோ குடியைக் குடித்தும்,
போதையில் மயங்கி பாதை மாறிய
பயணமதில் விபரீத மரணங்கள்
பிடிப்பில்லா வாழ்வு தூக்கில்
தொங்கிடுதே

நடித்து நாடகம் போடும் நம்மின
அரசியல்வாதிகளும் தன்னலங்கருதி
குப்பாடி அரசியலின் கூட்டுச் சேர்ப்பில்
எங்கே சுதந்திரமாம்.