வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

16.11.23
கவி இலக்கம்- 291
சுழலும் சக்கரம்

சுற்றிச் சுழலும் பூமிப் பந்தில்
பற்றிக் கொள்ளும் புகழ்,
பொறாமை தொற்றிய
நோயாகுதே

காக்காய் பிடிக்கக் கற்றுக்
கொண்டால் சாட்டுப் போக்குச்
சொல்லி சோக்காய் வாழத்
தாக்கமாகுதே

அனைத்தையும் படைத்தவன்
ஆண்டவன் எனில் மனிதன்
படைத்தது எதுவோ அதுவோ
புடைத்து அருவருப்பு ஆகுதே

முற்றுந் துறந்த முனிவர் கூட
பெற்று விட்ட கொரோனா
தந்த அனுபவம் கற்றுக்
கொண்ட பாடமாகுதே