14.11.23
ஆக்கம் -123
நீரழிவு
அன்றைய வாழ்வில் அதிக
ஆரோக்கிய உணவு பற்றியதே
இன்றைய வீழ்வில் சதியான
நீரழிவு நோய் முற்றியதே
சின்னஞ்சிறு மழலை முதல்
பெரியோர் வரை தொற்றியதே
சிலரிலோ பரம்பரை பலரிலோ
கண்டது உண்ட கறை சுற்றியதே
அவசர உலகம் ஆடம்பரத் திட்டம் ,
கடகடவென ஓட்டம் , வயிறு முட்ட
உண்டதும் நேரத்துடனே படுக்கை ,
ஊக்கமற்ற நாட்டமிலா உடற்பயிற்சி
தேவையற்ற பழக்கவழக்கமும்
இன்னுமின்னுமென பட்டுப்போன
பாவியரில் குட்டிய நீரழிவுடன்
ஊசியும் ,மாத்திரையும்
பேரழிவென முணுமுணுத்ததே .