வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.11.23
பதிலூட்டும் உருவங்கள்
கவி இலக்கம்-289

உயிரூட்டும் உருவங்கள்
பயிர் வளர்ந்த விளைச்சல்-போல்
நல்வழிகாட்டியாய் பதில்
சொல்லிடுமே

எழுத முடியாத தாக்கம்
மனதோடு பதிந்த
பந்தமல்லவே

கிணற்றுத் தவக்கையாய்
வாழ்ந்தவன் பார் போற்ற
வணங்கிடுவான்

துவக்கெடுத்தவன் துவக்குக்
குண்டாலே சாவு கண்டிடுவான்

கொடுமையில் தவிப்பவன்
கடுமையாகத் துதிப்பவன்
நடு நீதியாக நிலைத்திடுவான்

வடுக்கள் சுமப்பவன்
வெடுக்கெனத் துள்ளி எழுந்து
மிடுக்கோடு பறை சாற்ற

ஞாபகமூட்டும் சான்றுகளே
நிலையாய் நின்று பதிலூட்டும்
உருவங்கள் .