சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

31.10.23
கவி இலக்கம் -121
மாவீரரே

மண்ணின் விடுதலைக்காக
உயிரோடு புதைந்த மாவீரரே !

கண்ணில் விளைந்த
இமயச் சோகமதில்
இரத்தக் கண்ணீர்
சிந்துதே

எத்தனை காலந்தான்
மாந்தர் ஏமாறுவது
அத்தனை சித்தப்-
பிரமை முந்துதே

அடுத்த சந்ததியும்
நாமே நாமே
கொடுத்த வாக்குறுதியும்
வருதே வருதே என்று

மானமில்லா மரங்கள்
ஊனமுள்ள ஊஞ்சலில் குந்தி
குதூகலம் பாடுதே

கடுகடுத்த நீதி நடுத் தெருவிலே
நாறுநாறாய்க் கிழித்தது காணப்
பொங்கி எழுந்து வாருங்கள்
மிதமிஞ்சிய உயிர் காத்திடுவீர்
மாவீரரே .