வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.10.23
கவி இலக்கம் -287
எங்குதான் போய்முடியுமோ

சின்னதாய்க் கோள் மூண்டு
பென்னம் பெரிதாய்க் கன்னம்
விட்டு சீண்டிடும் நாடகக்
குழுவுக்கு என்னதான் வேண்டும் ?

வல்லரசு நாடுகளின் சதியான
வலைப் பின்னலின் சதியே
நிலைப்பாடில்லாத அரசியலின்
தந்திரமதில் பலிக்கடாக்கள்
மாந்தரே

கொலைக் கூட்டத் தலைகள்
நடாத்தும் போராட்டமே
சில நாடு தொடங்கி பல நாடு
சேர்ந்த அகோரப் பசியின்
இரத்த வெறித் தாண்டவமே

பேசுவதோ சூழல் மாசு
பிறக்கும் சந்ததியோ தூசு
நாசூக்காய்க் கொடுப்பது வேறு
மூசி மூசி உழைத்த காசெல்லாம்
குண்டு குண்டாய் ஒரு நொடியில்
பறந்து பறந்து சிதறுது
ரொக்கட்டில் .