சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

31.01.23
ஆக்கம்-91
விருப்பு
கால் செருப்பில் கச்சிதமாய் விருப்போடு
ஒட்டியது விஷக் கிருமி
பறந்து போய் மதில் சுவரில் விறுவிறுப்போடு
குந்தியது

பக்கத்து வீட்டுக் கனவான் உருளைக் கிழங்குப்
பொரியல் கொறிப்பதும் பியர் குடிப்பதுமாய்
இருப்பதை விடுப்போடு எட்டி எட்டிப் பார்த்தத

குப்பை பாக்கைத் தூக்கிக் கொண்டு வந்தவன்
மூக்கில் கொசுவோடு கொசுவாக முட்டி
முனகியது

விட்டானே ஒரு அடி
தொப்பென விழுந்தது சுவாசப்பையிலே
இருந்ததெல்லாம் விறாண்டி உண்டாலும்
திண்ட வயிறு இன்னும் பசி பசி என
விருப்போடு கத்திடவே இதுவும் ஒரு
பிழைப்பா என்று வெறுப்போடு
வைரஸ் கிருமியைக் கேலி செய்தது
விஷ ஊசி.