03.10.23
கவி இலக்கம் 117
குழலோசை
கண்ணைப் பறிக்கும்
விண்ணில் காணும்
விண்மீன்கள் மின்னி
மின்னிக் கண் சிமிட்டும்
ஒளியோசை
மண்ணிற்கும் விண்ணிற்கும்
பாலமிட்டு ஏணிப்படி ஏறிடும்
மழைத்துளியின் குமிழோசை
அழகழகாக வரைந்த ஓவியம்
போல் வானத்துப் பட்சிகள்
குழுவாகப் பறந்து கூவிடும்
வளையோசை
நதியில் நீராடி கடலில் கலந்து
இயற்கையுடன் ஈன்று திரண்டு
புரண்டு முரண்டிடும்
அலையோசை
இனிய அசைவுடன் குழலோடு
கூத்தாடும் குறும்புக் கண்ணன்
பாட்டிசையில் மதி மயங்கி
நிற்கும் மங்கையரின் மனதில்
இடம்பிடிக்கும் குழலோசை .