வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.09.23
கவி இலக்கம் 285
விந்தை

மெல்ல மெல்லப் புள்ளி
இட்ட மேனி சிவந்த
வானத்தில் முகில்
வரைந்த கோலங்கள்

மழைத்துளி பட்டது போல்
கரைந்து காணாமல்
போகிறதே

அண்ணாந்து பார்க்க
அளக்கவே முடியாத
வானத்தில் பயமின்றி
விமானம் பறக்கிறதே

கடல் எவ்வளவு
கொந்தளிப்பாயினும்
பயணிகள் சுமந்து
கப்பல் கரை சேர்கிறதே

மலை உயரமாயினும்
உச்சி ஏறிச் சாதனை
படைக்கும் மனிதன்

விந்தையிலும் விந்தை
முயற்சியே மூலதனம்
முழுமூச்சே சுவாசம்
ஆகிறது .