சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.09.23
கவி இலக்கம் -116
வலை பூ

விஞ்ஞான உலகு
வீரிய வலை விரிப்பு
தொழில் நுட்பம்
தோன்றிய வலை பூ

அஞ்ஞான அலகு கலைப்பு
மிதமிஞ்சிய மூளை
நரம்பு குலைப்பு

முகநூல் பாவனை
மூக்கு நுழைப்பு
அக பாகமோ கழைப்பு

பொய்,உருட்டு,பிரட்டு,
பித்தலாட்ட முகமோ
அழைப்பு

இருண்டவர் மருண்டு
நோயில் மருந்து
மாத்திரை துளைப்பு

அருண்டு உருண்ட
வாழ்வு உளுத்துப்
போன இணைய
வலை பூ