19.09.23
ஆக்கம்-115
தலைப்பூ
ஊமைக் கவிதையில்
உருவாகும் உறுப்பு
அருமைக் கருவில்
ஆயிரம் உயிராகும்
சுவைப்பு
பூவுக்குள் பூகம்ப படைப்பு
காவி வரும் தலைப்பூ
தினம் மலரும் பூவானது
மணம் பரப்ப கொண்டையில்
சூடிட அழைப்பு
மலைக்கும் மடுவுக்கும் இயற்கை
அலையில் மோதும் பரிதவிப்பு
பிறப்பு இறப்புக்கு நடுவில்
போராடும் உழைப்பு
அகதி மொழியோடு விழி
பிதுங்கும் இதயத் துடிப்பு
வழமைக்குள் வாழ இளமையில்
வந்த புன்சிரிப்பு
இதுவோ சத்துப் பிடிப்பு
முதுமையில் வந்த வெறுப்பு
அதுவோ அனுபவப் படிப்பின்
வெடிப்பு .