வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.09.23
கவி இலக்கம்-282
எழுத்தறிவில்லை எனில்

தோன்றிற் புகழோடு தோன்றுக
இதுவோ வள்ளுவன் வாக்கு

படிப்பறிவோடு உலகறிவும் சேர
புகழ் பெற வழி எதுவோ
அது நோக்கு

கற்றோர் சபையில் பலரறிய
உன் குரல் ஓங்கியே ஒலிக்கும்

இல்லையேல் மறைந்து ஒழிய
மனங் கூச பேச்சு வராது நிற்கும்

தீய நெறி சென்று தரங் கெட்டு
குறுக்குவழி புகுந்து தீய
பழக்கவழக்கம் சேர்ந்து
வாழ்வே நரகமாகும்

எழுத்தறிவில்லை எனில்
கடமை அறியாது சரி,பிழை
ஆராயத் தெரியாது தவறுகள்
புரியாது காமம், கோபம்
சொரிய குறிககோள் இல்லாது
வாழுங்காலம் பரிதாபமே
பரிதாபமே .