சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

24.01.23
ஆக்கம்-90
யோசி
சட்டெனச் சில்லிட்டது தேகம்
மனதில் அன்று பட்டதைக்
குட்டிக் குட்டி யோசித்ததே

கட்டி வளர்த்த பெற்றோா்,
சொந்த பந்தமதில் கூட்டுக் குடும்பமோடு
சுட்டித் தனங்கள் காட்டியதே

வெட்டி விட்ட தோட்ட வாய்க்காலில்
கடதாசித் தோணி விட்டது ஞாபகமானதே
பாடசாலை விட்டு வீடு வரும்போது 1கி.மீ
ஓடி வந்து வெள்ளைச் சட்டையில் ஏறிப்பாயும்
யோன் எனும் நன்றி உள்ள நாய்க்குட்டி

மழை நேரமதில் விவசாய விளைச்சலை
ஏற்றிச் செல்லும் பார ஊர்தி வீதி வாய்க்கால்
கிடங்கில் புதைந்து அப்பா,அண்ணா பட்டபாடு
என்றென்றும் யோசித்தால் நாம் கடந்து வந்த
பாதையின் அடிச்சுவடுகளே.