சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

05.09.23
கவி இலக்கம்- 113
விடுமுறை களிப்பு

விடுமுறை பலமுறை வந்திடினும்
இம்முறை மனதுக்கு களிப்போடு
விருந்தானது

தாய் மண்ணில் திரும்ப கால்
பதித்ததும் துருதுருவென
கண்ணும் ,காலும் ஓடியது

பிறந்த புகுந்த வீடு
வாழை,மிளகாய்த் தோட்டமும்

வாலாட்டும் நன்றி உள்ள ஜீவனும்
துள்ளி விளையாடும் ஆடு,பூனைக்
குட்டியும்
அன்றைய ஞாபகம் வந்திடுச்சு

நல்லூர், செல்வச் சந்நதி திருவிழாவில்
ஐஸ்கிறீம் உண்டு நா ஊறிடுச்சு

உற்றார்,உறவினர் ,ஆசிரியர் கண்டு
உறவாடியதில் இருந்த நோயெல்லாம்
பறந்திடுச்சு

இன்றோடு முடியுது விடுமுறை
என்றது எரிச்சல்

விடுமுறை களிப்பு மீண்டும்
எப்போது வருமென ஏக்கமுடன்
பெருமூச்சு எறிந்திடுச்சு இதயம்.