சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

29.08.23
கவி இலக்கம் -112
வாக்கு

தேர்தல் வருது வருகுது
ஒரு வோட்டுக் கேட்டு
கட்டுக் கட்டாய் நீட்டுது
நோட்டு

கோட்டும் சூட்டும்,
வெள்ளை வேட்டியும்
பட்டுச் சால்வையும்
கூட்டம் போட்டுக்
கொட்டமடிக்குது

ஒரு திட்டமும் இல்லை
கட்டம் போடுது நாக்கு
பட்டம் விடுது வாக்கு

இது என்ன தெய்வவாக்கா
அதை உற்று நோக்க
சாக்குப் போக்குச் சொல்லி
வாக்குறுதி கொட்டுது

ஆட்சிக்கு வந்தால்
பல காட்சிகள் காட்டுவம்
பழைய பட்சிகள் பறக்கும்
இது என்ன சின்னத்திரையா

பொய் போர்த்திய வாக்குப்பெட்டி
பென்னம் பெரிய கதிரையிலேறுது
வாய் பொத்தி நிற்குது வாக்குப் பெட்டி
பழையபடி முருங்கை ஏறுது
ஏறப் போகுது .