24.08.23
கவி இலக்கம் -280
என்று தீரும்
என்று தீரும் ஏக்கமான தாக்கம்
கொன்று குவியும் கொடூரம்
வென்றவுடன் நின்றுதான் போகுமா?
எத் திசையிலும் போராட்டம்
பெற்றிட முடியாத தீர்வின்
சீர் கேடுகள் என்றுந் தொடருமே
இனப் பிரச்சனையில் ஈரமான தமிழன்
அகதி மண்ணில் அகப்பட்டு
ஊமையாக்கிய நினைவுகள்
மெல்ல மெல்ல எழுந்தவன்
அல்லல்படடுத் துவண்டானே
ஆக்கிரமித்த அகோரமான
கொரோனாவால்
அக்கிரமமானது வேலையில்லாத்
திண்டாட்டம்
உக்கிரமமானது பொருளாதாரம்
வெந்த மேனியின் வலிகள்
வேதனையில் இதயம்
காயமதில் கழிவு நீர்
கசியாமல் போனதே
தொங்கிய பண நெருக்கடி
பொங்கியே சுருங்கி வெடித்த
மூச்சு
தாய் மண்ணில் வாழ வழியில்லை
நோய் நொடியால் வந்த இடத்தில்
நிம்மதியில்லை
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை
எப்போ ஓங்கிடும் என்று தீரும்
என்றும் தீருமா ?