22.08.23
கவி இலக்கம்-111
தலையீடு
தலையீடு சிலருக்குத் தாகம்
அடுத்தவன் செயலில் புகுந்து
உலையைக் கொதிக்க வைக்கும்
விவேகம்
அது இது படி எனப் பெற்றோர்
பிள்ளையை வற்புறுத்தும்
வேகம்
தோளிற்கு மேல் வளர்ந்தவரைத்
துருவித் துருவி பட்டப் படிப்பைக்
குழப்பிய சோகம்
விவாகம் ஆனவரைத் துரத்தித்
துரத்தி வேண்டாத வினையை
விலைக்கு வாங்கும் உற்றார்
உறவினர் மோகம்
கட்டிக் கொடுத்த பின்னும்
கொட்டிப் புழுங்கி முட்டி முட்டி
கட்டி ஆளும் தலையீடு
என்றென்றும் மாறாத
மாற்ற முடியாத பெரிய
தலையிடி தலையிடியே .