18.07.23
கவி இலக்கம் -110
இயற்கை
அழகான கண்ணுக்கு
ஆட்டிப் படைக்கும்
விதம் விதமான
வர்ண அழகு
மண்ணுக்கும் விண்ணுக்கும்
இடையே இயற்கை எனும்
விருந்தை ஈன்றெடுத்த இறைவன்
கொடை தனி அழகு
வானமெனும் நீலக் கடலில்
விண்மீன்கள் பரப்பி சூரிய
சந்திரனைச் சுழலவிட்டு
ஒளியும் இருளும் சூழ்ந்திட்ட
இரவு பகல் பேரழகு
மாரியும் கோடையும்
களைப்பாறவே காலங்கள்
பகிர்ந்தது பாரழகு
காவியம் படைக்கும்
மாந்தர் இடையே
ஓவியம் வரையும்
பச்சைப் பசேலாய்
மரம்,செடி,கொடி,புல்,பூண்டும்
பார் போற்றும் வகை வகையான
பறவை,மிருகமும் இயற்கைக்
கொடைதனில் அழகோ அழகு .