13.07.23
கவி இலக்கம்- 277
வாழ்வெனும் ஓடம்
ஒரு முறை ஏறும் ஓடமிது
பலமுறை தேறும் பாடமது
நாளும் பொழுதும் படிக்கும்
வேடமிது
ஆணும் பெண்ணும் கலந்த நாடகமிது
வேணும் வேணும் என்றிருப்பின்
கல்லையும் கரைய வைக்கும்
புல்லையும் பூவாக்கும்
பொறுமை நறுமணமாகும்
சிறுமை அறவே மறக்க
முழுமை நிறைவே சிறக்கும்
இன்ப துன்பம் தேடி வரும்
இரவு பகல் போலவே
இடியும் மழையும் நாடி வரும்
நோய் நொடியும் சேரவே
இறப்பும் பிறப்பும் தேடி
வரும்
உழைப்பில் முயற்சி
மனமோ மகிழ்ச்சி
குட்டிச் செல்வங்கள்
குடும்பமுடன் குதூகலமாய்
வாழ்வு இன்பமுடன்
ஓடத்தில் விரைந்திடுமே