வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.06.23
கவி இலக்கம்-273
வலிகள்

மனதில் அடைத்த மூச்சு
பேச்சு வராது அழுதிடும்
கண்ணீரில் மிதக்கும் வலிகள்
ஏராளம்

கணப்பொழுதில் துரத்திடும் விபத்து
பொத்துப் பொத்தெனப் பிணமாகும்
பலிகள்

இயற்கை,செயற்கையின் சேதாரம்
எங்கும் ஏங்கும் ஆபத்து ஆதாரம்
அங்குமிங்கம் இரத்த வெறித் தாகம்

அண்ட வெளியை அளக்க முடியவில்லை
கொண்ட கோலம் விளக்கத் தெரியவில்லை
கண்ட இடமோ கத்திக் குத்து,துப்பாக்கிச் சூடு
துவண்ட பாடம் துரத்த வழியில்லை

உணர்வற்ற ஊமைப் பசிக்கு
உணவாகும் சிறுவர்கள்
தணலாகும் நெருப்புத் தெறிக்க
தெரிந்தும் தெரியாமல்
புரிந்தும் புரியாமல் சுமக்கிறதே
மனம் வலிகளுடன்