சந்தம் சிந்தும் கவிதை

ரனோகரி ஜெகதீசன்

பணி

நீச வேரறுக்க நிமலனடி பணி
கூசியோடும் ஐம்புல ஆசை
குப்புற வீழ்த்தா வகை
பாசவலைப் பின்னலிட்டு
பரிபாலிக்கும் அன்னை ஆணைக்குப் பணி
அனைத்திலும் ஆகுவாய்
முன்னணி
அனைத்திற்கும் பின்னணி அவளேயறி
ஆசறுத்துத் திறனேற்றும் ஆசான்முன் ஆவலோடு
பணி
அறியாமை வெருண்டோடப் புகுந்தேறும் ஆளுமை
நிமிர்ந்தே நீவாழ அதுவே துணையாகும் அறி
பணிவார் முன்பணி
அணியே உனக்கது அறி
நல்லனமுன் பணித்தல்
குனிவல்ல
அல்லன தேய அருவழியே அது
அறம் கூட்ட உதவும் பணியே
உள்ளன தேர்ந்து
உயரிதற்குப் பணிதல்
வீரியம் கூட்டவே அறி