சந்தம் சிந்தும் கவிதை

ரஞ்சிதா கலைஅரசன்

“நட்பு “. பள்ளிக் காலத்தில் இணைபிரியா என் நண்பி
பத்தாம் வகுப்புவரை படித்தோம்
நட்பில் ஒன்றி
இப்போ நினைத்தாலும் பல எண்ணம் இனிக்கும்
இவளோடு நான் கழித்த நினைவு
எழ மனம் சிரிக்கும்
எப்போதும் இணையராய்தான்
எங்கும் இருப்போம்
என் காசு என் பேனா என்லெல்லாம்
இருக்காது பேதம்
எமக்குள் ஒருவர் பள்ளியில் இல்லாத
நாள் மற்றவர் மனம் குழம்பும்
எவருக்கும் எம் நட்பின் இறுக்கம் விளங்கும்
ஏயெல் பெயிலாகி நான்
வீடே உலகம் என்றாக
இவளோ பாசாகி பல்கலை கழகம் போக
நாலைந்து கடிதங்கள் மாதாந்தம்
நாளாக தேய
ஏழெட்டு ஆண்டின் பின்
என் குடும்பம் பிள்ளைகள் என்றாக
ஊரோடு இருந்த என் காணி
உறுதிபெற நான்
நொத்தாரிசிடம் போக
வாவன்ரி உள்ளே என்று
வரவேற்று நொத்தாரிசாய்
நண்பி கூவ
ஆவென்று வாய்பிழந்தார்
என் கணவர் நானோ
அங்கிருந்தோர் முன்
கீரோயின் ஆக.