அன்பு..
கண்டேனே உன்னை கணமும் இறைபோலே
கொண்டேனே உயிர்களில் கொள்கையில்லா காதலை
விண்ணிலே மின்னுகின்ற விண்மீன்கள் போல
மண்ணிலேஎன் னுள்ளேமின் னாய்
காக்கை குருவி காட்டு விலங்குகள்
ஏக்கத்தை போக்கும் ஏதிலித் தன்மை
அழிக்கும் கங்குல் அன்பை விதைக்கும்
வழியினை காட்டுமேகாட் டில்
நாட்டில் நாமே நரகத்தை காட்டியே
தேட்டத்தில் குறியாய் தேங்கியே போகிறோம்
ஊட்டத்தில் நாட்டமின்றி கூட்டத்தில் கூவியே
ஏட்டில் எழுத்தாயுள் ளோம்
பூனையும் யானையும் பூரானும் நேசத்தை
தேனாய்ப் பருகி தெளிவாய் இருக்கத்தான்
வானை மிஞ்சும் அறிவை வளர்த்தநீயோ
ஊனை பிடுங்கித்தின் கிறாய்..!
-ரஜிதா அரிச்சந்திரன்