“பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேது?..ரஜனி அன்ரன் (B.A)19.01.2023
அறிவின் தேடலை ஆற்றலின் முனைப்பினை
இயல்பின் உந்தலை ஈகையின் பெருமையை
நம்பிக்கை உணர்வினை நாளைய கனவினை
நமதாக்கிட வலிமையைத் துடுப்பாக்கி
பெருகிடும் ஆண்டினைப் பெருமையாக்கி
மெருகூட்டுவோம் வலிமை கொண்டு !
ஆற்றல் பெருக ஆளுமை மிளிர
போற்றலும் புரிதலும் துணையாகிட
வளம் பெருகிட வல்லமை ஓங்கிட
வலிமையோடு வாழ்வும் நகர்ந்திட
படைப்புக்களும் பல்கிப் பெருகிட
தங்கு தடையின்றிப்
பொங்கிப் பெருகட்டும் வலிமை !
தரணியில் தடம் பதிக்க
தடைகள் என்று இங்கு எதுவுமில்லை
தடையினை உடைத்து முனைப்போடு உயர
நீடு புகழினை நேர்த்தியாக்கிட
வாழ்வினை மெருகிட வளமினை உரமிட
பெருகட்டும் எங்கும் வலிமை !