வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

மனிதத்தின் நேயமே ! கவி….ரஜனி அன்ரன் (B.A) 07.12.2023

மனிதத்தின் நேயமே
மானிடச் சுவாசம்
மனிதனை மனிதன் மதித்தலும்
மனித நேயம் பேணலும்
மகத்தான நேசம் !

அன்று மனிதநேய விழுமியங்கள்
மானிட வாழ்வைச் சீர்ப்படுத்த
இன்றோ வர்க்க பேதங்கள் பெருகி
வன்முறைகளும் வெடித்து
அதிகாரங்கள் போட்டியாகி
குரோதங்கள் வன்மமாகி
மனிதமும் தொலைந்து போயாச்சு
மனிதநேயமும் அருகிப் போயாச்சு !

வாழ்க்கை என்பது போராட்டம்
வாழ்வியல் பாதையோ நீரோட்டம்
வாழ்க்கையோ ஒருமுறை
வாழ்வோம் மனிதநேயத்தோடு
கை கொடுப்போம் நேசத்தோடு
மலரட்டும் எங்கும் மனிதநேயம்
மனிதத்தின் நேயமே மகத்துவ நேசம் !