வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ உயிர்நேயம் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 08.12.2022

மனிதம் பேண வர்க்க பேதமின்றி
மனிதநேயத்தோடு உயிர்நேயம் காத்து
மாந்தரை மாந்தராய் மதித்து
மனுக்குலத்தை நேசித்து
உயிர்நேயம் பேணலே
மனித உரிமையின் தார்மீகம் !

இன்னல்கள் நேரும் போதெல்லாம்
தன்னலம் இன்றியே
மன்னுயிர்களையும் காத்து
சமூகத்தோடு ஒன்றி வாழ்ந்து
மனுக்குலத்தை நேசிப்போம்
மறவாது காத்திடுவோம் உயிர்நேயம் !

ஜனநாயகத்தின் ஆணிவேர் மனிதஉரிமை
மனித உரிமைக்கு அடிநாதம் உயிர்நேயமே
மனித உரிமையே மானிடர்க்குப் பெருமை
உன்னதமானது உயிர்நேயம்
உயிர்நேயம் காத்தல் மாந்தர் கடமை !

உயர்வு தாழ்வு ஒழியட்டும்
உன்னத தர்மம் நிலைக்கட்டும்
உயிர்நேயம் வளரட்டும்
மலரட்டும் மண்ணில் மனிதநேயம்
காத்திடுவோம் என்றும் உயிர்நேயம் !