வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ஒளியின்றி ஒளிர்வெங்கே ? கவி….ரஜனி அன்ரன் (B.A) 09.11.2023

இருளகற்றி ஒளிர்வைக் கொடுக்க
உலகை ஒளிரச் செய்வான் சூரியன்
இரவிற்கு ஒளி கொடுப்பான் சந்திரன்
கண்சிமிட்டி ஒளி கொடுக்குமே தாரகைகள்
இத்தனையும் இல்லையென்றால்
இருட்டே நிரந்தரம்
ஒளியின்றி ஒளிர்வுதான் எங்கே?

உலகு இயங்கவும் உயிரின வளர்ச்சிக்கும்
உன்னத மானிட இனத்திற்கும்
தாவர வர்க்கத்திற்கும் ஜீவராசிகளுக்கும்
ஒளியின்றி வாழ்வு இல்லையே
இருளகற்றி வாழ்வினை
ஒளிர்வாக்குவது ஒளியே ஒளியே !

தன்னை உருக்கி எமக்கு
ஒளியைத் தருவது மெழுகுதிரி
ஒளி இல்லையேல் விழிகூடத் தெரியாது
வித்தகங்களும் புரியாது
மறவர்கள் ஒளியின்றி மண்ணிற்கு ஒளிர்வில்லை
கல்லறை மேனியர் கண்திறக்க ஒளித்தீபமேற்றி
ஒளிரச் செய்வோம் கார்த்திகைத் திங்களிலே !