வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ விழிப்புணர்வு “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 01.12.2022

ஆரோக்கியம் மனித உரிமை
ஆயுளுக்கு வலு ஆரோக்கிய வாழ்வே
விழிப்போடு வாழ்ந்திட விழிப்புணர்வு தேவை
விந்தை உலகுதனில் விசித்திர நோய்கள்
மனித சமூகத்திற்கு சவாலாகிட
கொடிய நோய்களும் விடாமல் தாக்க
அச்சுறுத்தலாகுது உலகில் எயிட்சும் !

உயிர்கொல்லியாகி உயிரை எடுக்குது
சிகிச்சையும் பலனின்றி
உயிர்களும் மடியுது
விழிப்புணர்வைக் கொடுக்க
வழி சமைத்தது ஐ.நா.மன்றும்
டிசம்பர் முதலாம்நாளை
உலக எயிட்ஸ் தினமாக !

வரைமுறையற்ற உறவுகளும்
போதைவஸ்த்து ஊசிப் பயன்பாடுகளும்
கொடிய நோய்க்கு காரணமாக
காவுகொள்ளுதே மனித உயிர்களை
அழகான வாழ்வினை
ஆள்கொல்லிக்கு தாரை வார்க்காது
விழிப்புணர்வோடு செயற்பட்டால்
ஆரோக்கியமாகுமே வாழ்வு !