“ வேலாயுதம் ஐயா “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 31.08.2023
எழிலான காரைநகரில் பிறந்து
ஒயிலான ஒல்லாந்து நாட்டினில் வசித்து
ஐக்கியராச்சியத்தில் ஐக்கியமாகி
ஐரோப்பிய வலச் செய்திகளோடு
இருபத்தியாறு வருடங்கள் பயணித்து
அதிரடியாக ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்ற
வேலாயுதம் ஐயாவிற்கு எமது அஞ்சலிகள் !
பத்திரிகை நிருபராய் நாடக நடிகனாய்
திரைப்பட நடிகனாய் தயாரிப்பாளனாய்
செய்தியாளனாய் பல்துறைக் கலைஞனாய் வாழ்ந்து
புலம் பெயர்ந்து வந்த போதும்
கலைத் தாகத்தோடு செயற்பட்ட
கலைஞனாம் வேலாயுதம் ஐயாவை
காலனும் அழைத்தானே கடுகதியில் !
அன்றில் இருந்து இன்றுவரை
ஒல்லாந்து செய்திகளோடு தொடங்கிய பயணம்
ஐரோப்பிய செய்திகளாக பரந்து விரிந்து
இறுதி மூச்சு வரை உறுதியோடு செயற்பட்டு
தீராக் காதலோடு ரி ஆர் ரியை நேசித்து
காதோரம் ஒலித்த குரல் காற்றோடு கலந்ததுவே !