வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“நேயம்”…..கவி…..ரஜனி அன்ரன் (B.A) 17.08.2023

உயிரோடும் உயிர்ப்போடும் வாழ
உன்னதமானது நேயம்
நேசம் கொண்டு நேயம் காப்போம்
அறிவிருந்தும் ஆளுமை இருந்தும்
அதிகார பலம் இருந்தும்
நேயம் இன்றிய வாழ்வு
நேசமில்லா சுயநல வாழ்வே !

அவலக் குரல் கேட்டால்
துடித்தெழும் வேகமும்
ஆதரவுக் கரம் கொடுக்கும் இணைவும்
ஆபத்தில் கை தூக்கிவிடும் நேயமும்
மனிதநேயப் பண்புகள்
நேயம் காப்போம் நேசத்தோடு !

பொன்னைப் பொருளை மண்ணைத் தேடி
அலைந்து திரிகிறான் மனிதன் இன்று
சொந்த பந்தம் சுற்றுச்சூழல் மறந்து
சுற்றித் திரிகிறான் சுயநலவாதியாய்
மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பு நடாத்தி
குளிர் காய்கிறான் மகிழ்வோடு
வாழ்வோம் நேயத்தோடு
மலரட்டும் எங்கும் மனிதநேயம் !