“ விடுமுறை வந்தாலே “ ……..கவி…..ரஜனி அன்ரன் (B.A) 20.07.2023
வாடையை விரட்டி வசந்தத்தைத் தந்த கோடை
கொடையாய் கிடைத்ததே எமக்கு
கோடை விடுமுறை வந்தாலே
கொண்டாட்டம் கும்மாளமென
கோவில் திருவிழாக்கள் களைகட்ட
குடும்ப விழாக்களும் கலகலக்க
பள்ளிக்கும் பணிக்கும் விடுப்பாக
குடும்பமாய் கூடிமகிழும் விடுமுறை காலமிது !
இயற்கை அழகை ரசித்து மகிழ
இயந்திர வாழ்விற்கு இடைவேளை கொடுக்க
இயற்கையோடு பொழுதைக் கழிக்க
உறவுகளோடு உறவாடி மகிழ
பயண அட்டையும் கைகொடுக்க
மகிழ்வாய் வந்ததே கோடை விடுமுறையும் !
வசந்த காலமதை சுகந்தமாக்கி
படகுப் பயணத்தை மேற்கொள்ள
சுற்றுலாத் தளத்தினைச் சுற்றிவர
சுமைகளை எல்லாம் இறக்கி வைக்க
வரமாய் கிடைத்தது கோடை விடுமுறை
கோடை விடுமுறை வந்தாலே கொள்ளை இன்பமே !