வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ மக்கள் பெருக்கம் “…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 13.07.2023

மலைக்க வைக்குது மக்கள் தொகைப் பெருக்கம்
அதிகரிக்குது உலக மக்கள் தொகை
எட்டி விட்டது இப்போ
எண்ணூற்றி நாற்பத்திமூன்று கோடிகளை
மக்கள் தொகையைக் குறைக்க
மக்களுக்கு விழிப்புணர்வைக் கொடுக்க
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தினத்தினை
அமுலாக்கியதே ஐ.நா.வும் யூலை பதினோராம் நாளை !

மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க
தேவைகளைப் புரிந்து கொள்ள
திட்டமிடுதலைத் தீவிரப்படுத்த
தீர்வுகளைத் தெளிவாக்க
தேவை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
மக்கள் தொகையில் முதலிடத்தை தனதாக்கியதே இந்தியாவும் !

பாலின சமத்துவத்தை வலியுறுத்தலையும்
பெண்கள் சிறுமிகளின் குரல் ஓங்கியொலித்தலையும்
கருப்பொருள் ஆக்கியது ஐ.நா மன்றும் இந்த ஆண்டினை
அடுத்த முப்பது ஆண்டுகளில் இருநூறு கோடிகளை
எட்டி விடுமென எச்சரிக்கிறதே ஐ.நா.வும்
மக்கள் தொகைப் பெருக்கம் ஒருபக்கம்
பருவநிலை மாற்றம் மறுபக்கமென
சவாலோடு நகர்ந்து செல்கிறது வாழ்வும் !