வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ பட்டத்துராணி இரண்டாம் எலிசபெத் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 15.09.2022

பிரிட்டிஸ் சாம்ராச்சியத்தின் பட்டத்துராணி
நெறிதவறாது ஆட்சிபுரிந்த மகாராணி
பத்துவயதிலேயே பட்டத்து இளவரசி
இருபத்தைந்தில் மகாராணியாக முடிசூடி
அரியணையில் ஆட்சிபீடத்தில் அமர்ந்து
எழுபது ஆண்டுகளை நிறைவுசெய்த சாதனைப்பெண்
எலிசபெத் மகாராணி அகவை தொண்ணூற்றியாறில்
இவ்வுலகை விட்டு ஏகினாரே செப்ரெம்பர் எட்டினிலே !

இராணி எலிசபெத் இராஜமாதாவாகி
உலகைத் தன் உள்ளங்கையில் வைத்து
உன்னதமாய் ஜனநாயக முறையில்
பிரிட்டிஸ் சாம்ராச்சியத்தை ஆட்சி செய்து
பொதுநலவாய நாடுகளின் தலைவியுமாகி
மக்கள் மனங்களை வென்று
கடமையுணர்வோடு செயற்பட்டாரே !

குதிரை ஏற்றத்தில் சிறந்த வீராங்கணை
குதிரைப் பந்தயத்தின் தீவிர ரசிகை
செல்லப் பிராணிகளின் பிரியமான இராணி
காலம் காலமாய் நாடுகளைச் சூறையாடிய
வெள்ளையர்கள் மத்தியிலே
வெள்ளையுள்ளம் கொண்ட மகாராணி
கொள்ளை கொண்டாரே மக்கள் மனதை !