“ மனிதநேயம் “……கவி……ரஜனி அன்ரன் (B.A) 18.08.2022
மனிதனை மனிதன் மதிக்க
மன்னுயிர்களைத் தன்னுயிராய் காக்க
காருண்யம் கருணையைப் பேண
தன்னைப் போல் மற்றவரையும் நேசிக்க
மனிதநேயம் காத்து மாந்தராய் வாழ
புனிதமாய் தந்ததே ஐ.நா.மன்றும்
ஓகஸ்ட் பத்தொன்பதாம் நாளை
அனைத்துலக மனிதநேய தினமாக !
பசியினால் துடிப்போர்க்கு பசியாற்றி
பாதையில் விழுந்தோர்க்கு கைகொடுத்து
பார்வை இழந்தோர்க்கு வழிகாட்டி
பக்க துணையாக இருப்போம்
பயணிப்போம் என்றும் மனித நேயத்துடன் !
அரிதான மானிடப் பிறப்பினில்
மாய விம்பத்தை நீக்கி
மனித நேயத்தைக் காத்து
பேதமின்றியே வாழ்ந்து
புதுவேதம் படைப்போம்
வற்றாத ஜீவநதியாக எங்கும்
வளமாகப் பாயட்டும் மனிதநேயம்
மனித நேயமே மாந்தர்க்கு அழகு
மனுதர்மமே வாழ்விற்கு செழிப்பு !