வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ தேடும் உறவுகள் “……கவி……ரஜனி அன்ரன் (B.A) 04.08.2022

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை
கைது செய்யப்பட்ட சொந்தங்களை
தேடித் தேடி நிதமும் களைத்து
உணர்விழந்து உடல் மெலிந்து
உளம் நலிந்த போதும்
உறவுகள் வருவார்கள் எனும் நம்பிக்கையில்
தொடர்கிறது தேடல் இன்றும் விடையின்றியே !

ஆண்டுகள் பன்னிரெண்டைத் தாண்டியும்
நீதி இன்னும் கிடைக்கவில்லை
நிம்மதியும் தான் கிட்டவில்லை
காலம் தாழ்த்தியபடி
கண் துடைப்பாய் நகருதே
தேடும் உறவுகளின் வாடும் நினைவுகள் !

தனிமையெனும் கொடியநோயும் வாட்ட
குடும்ப சுமைகளும் பாரமாக
தவித்திருக்கும் குடும்பங்கள்
வாழ்வே விரக்தியாகி
வாழ்வினை நகர்த்துகின்றார் ஏக்கத்தோடு
தேடும் உறவுகள் வந்திடுவாரெனும்
தேக்கமான நினைவுகளோடு !