“ பூமிப்பந்தில் நானும் “……கவி……ரஜனி அன்ரன் (B.A) 14..07.2022
பலகோடி உயிர்களை எல்லாம்
தன்மடி மீது தாயாகச் சுமந்தபடி
கண்டங்கள் கடல்கள் தீபகற்பங்களென
அற்புதங்களைத் தன்னகத்தே கொண்டபடி
அகில விளக்காம் சூரியனைச் சுற்றியபடி
தன் அச்சில் விலகாதபடி
நீள்வட்டப் பாதையிலே சுழன்றபடி
நித்தமுமாய் எமைச் சுமக்கிறாள் பூமித்தாய் !
தாய்மடியில் கிடந்து தவழ்ந்து
பூமிப்பந்தில் உருண்டு புரண்டு
மண்மடியில் கால்த்தடம் பதித்து
தத்தித் தத்தித் தளிர்நடை போட்டு
தலைநிமிர்ந்து நிற்க வளம்தந்து தளம்தந்த
பூமித்தாயைப் போற்றிடுவோம் என்றும் !
எட்டு மில்லியனை எட்டிப் பிடிக்குதாம்
பூமிப்பந்தில் உலக மக்கள்தொகை
சீனாவைத் தள்ளிவிட்டு
முதலிடத்தைப் பிடிக்குது இந்தியாவும்
எதிர்காலம் நோக்கிய கனவுகள் சிதைய
சமத்துவம் குன்ற உரிமைகளும் மறுக்கப்பட
பூமிப்பந்திலும் பாரிய நெருக்கடிகள்
வாழ்வு தந்த பூமித்தாய்க்கு வளம் சேர்ப்போம் !