வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ தந்தையெனும் விந்தை “ கவி……ரஜனி அன்ரன்….(B.A) 26.05.2022

தந்தையர் நாடாம் ஜேர்மனியில்
தந்தையர் தினமாம்
ஆயிரம் கனவுகளை ஆழ்மனதில் சுமந்து
அன்பினை மனதில் பூட்டி
தூரமாய் நின்று ரசித்திடும்
பாசக்காரத் தந்தையை தந்தையெனும் விந்தையை
நேசத்தோடு நினைத்திடுவோம் !

முதலெழுத்தின் முகவரியாகி
மெழுகாய் உருகி முழுதாய் சுமந்து
சக்கரமாய் சுழன்று எமக்காய் வாழ்ந்த
தந்தையெனும் விந்தையை
தன்னலமில்லாத் தியாகியை
உழைப்பின் உன்னதரை
உவகையோடு நினைத்திடுவோம் !

கண்டிப்பை எமக்குக் காட்டி
கருணையைப் பூட்டி வைத்து
கஸ்டத்தை மனதில் புதைத்து
கடினமாய் உழைத்த ஜீவனை
அதிசயமான புத்தகத்தை
ஆற்றலின் வல்லாளனை
ஆழமாய் நேசிப்போம் என்றும் !