“ வேண்டும் வலிமை “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 28.04.2022
வலிமையே வாழ்விற்கு உரம்
உடல்வலுவும் உளவலுவும்
ஒருங்கு சேர உண்டாகுமே வலிமை
வளமான வாழ்வினை உரமாக்க
சிறப்புக் குழந்தைகளைப் பொறுப்போடு வளர்க்க
பெற்றோர்க்கு என்றும் வேண்டுமே வலிமை !
தனித்தன்மை கொண்ட குழந்தைகளின்
தனித்துவத்தை அடையாளம் கண்டு
தனித் திறமைகளை வளர்க்கப்
பயிற்சிகள் பலதையும் கொடுத்து
எழுதப்பேச கதைக்க கற்றுக் கொடுத்தால்
மேதாவிகள் ஆக்கிடலாம் மேதினியில் !
சிறப்புக் குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்த
தடைகளைத் தாண்டி நடைபோட
எதிர்நீச்சலோடு சமூகத்தில் போராட
பெற்றோர்க்கு வேண்டுமே வலிமை !
பாமுக அதிபரின் பாரிய பணியாக
அழகிய மலர்களை அரவணைத்து
அவர்களின் திறமைக்கு களம் கொடுத்து
ஆற்றல்களை ஆளுமைகளை பாமுகத்தில்
அரங்கேற்றி மகிழ்கிறார் வலிமையோடு !