வியாழன் கவிதை

மேதின மேன்மையிலே…

உழைப்பெனும் உளியின் ஓர்தினமே
உழைப்பாளி வர்க்கத்தின் மேதினமே
நாளும் முட்கம்பி வேலிக்குள்
நம்மையே ஆளும் நம்சக்தி
வலம்வந்து மலர்கின்ற வையகம்
மெழுகென உருகிடும் உழைப்பாளி
ஒளி தந்து ஒளிர்கின்ற தொழிலாளி
இதயத்தை வருடிட வருவாயோ
ஈரத்தின் நிலவரம் உணர்வாயா
காயத்தின் தென்பு கூலியே
கடக்கின்ற பொழுதுகள் நம்பிக்கையில்
விதைக்கின்ற அறுவடை விருட்சங்களே
காலப் பரிதியின் கைங்கரியம்
ஞாலத்தின் மேன்மைக்கு ஒளியேற்றி
உயர்வே அனுதினம் விதைப்பாகும்
உயர்வழி ஒளிக்குள் இருபாதை
உயர்வும் தாழ்வும் உராய்ந்தெழுமே
அறுவடை அகிலத்தின் அச்சாணி
ஆயினும் தொழில்நிலை வெவ்வேறே
மேதின மேன்மையில் விழித்திறந்து
விருட்சத்தின் நாற்றை தோப்பாக்கு
வேற்றுமை தொழிலில் புகட்டாது
வென்றிட வாழ்தல் கொழுகொம்பே
அனுதின ஆற்றல் அடிப்பலமே
ஆளும் உலகை தொழில்த்தினமே!
நன்றி

நல்ல வடப்பிடிப்பில் சான்றுரைத்து
உயர்வினை அனுதினம் விதைப்பாக்கும்
உபாதையும் இடைக்கிடை வெளிப்படுமே
உயர்வும் தாழ்வும் உராய்ந்தெழும்
உள்ளக் குமுறலும்